இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நண்பர்கள் ஆதரவாக இருப்பர். விருந்தினர் வருகையால் செலவு ஏற்படும். பழைய கடனைப்பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் உண்டு.

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபார ரீதியான பயணத்தால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

மிதுனம்: சவாலான விஷயங்களை கூட சர்வ சாதாரணமாக முடித்து காட்டுவீர். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டி களில், விவாதங்களில் வெற்றி கிட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கடகம்: மனக் குழப்பங்கள் வந்து போகும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குலதெய்வ பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: புது முயற்சிக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும் . வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

துலாம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

விருச்சிகம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அலுவலக பயணங்கள் திருப்திதரும்.

தனுசு: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலக பணிகளை வீட்டிலும் செய்ய வேண்டி வரும். இருப்பினும் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கும்பம்: எல்லா வகையிலும் வெற்றி உண்டு. எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபார ரீதியாக நல்ல செய்திகள் வரும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: முகப்பொலிவு கூடும். கணவன்- மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்