இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மனதில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர். புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மிதுனம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. வியாபாரத்தில் போட்டி குறையும். லாபமுண்டு.

கடகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

கன்னி: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

துலாம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர். உத்தியோகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

தனுசு: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாறுவீர். உறவினர், நண்பர்களுடன் கருத்துமோதல் வந்து நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிட்டும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மகரம்: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக்கடன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும். மதிப்பு உயரும்.

கும்பம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை முடித்துக் காட்டுவீர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர். உத்தியோகம் சிறக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்