மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகள் முடியும்.
ரிஷபம்: சிக்கனமாக இருந்து சேமிக்கத் தொடங்குவீர். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வங்கியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர். தாயாருடன் இருந்த கருத்துமோதல் விலகும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் இருக்கும்.
கன்னி: வீட்டில் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். பிறர் மனது காயப்படும்படி பேசாதீர். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரம், உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
விருச்சிகம்: நேர்மறை சிந்தனை மனதில் உற்சாகத்தை தரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர் . வியாபாரரீதியாக பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.
தனுசு: மனதுக்கு இதமான செய்திகள் வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டு. வராது என்றிருந்த பணம் வந்து சேரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
மகரம்: குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர். பழைய கடனில் ஒரு பகுதி பைசலாகும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறுவதை தவிர்க்கவும்.
கும்பம்: தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர் . கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சந்தேகம் விலகும். வியாபாரம் சிறக்கும் அலுவலகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.
மீனம்: குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் வரும். கூட்டுத் தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் வரக் கூடும். அலுவலகத்தில் உங்களைப் பற்றி குறை கூறுவார்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago