இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்த்து கொண்டிருந்த பணம் வரும். பழுதான பொருட்களை மாற்றுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷபம்: குழப்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபமுண்டு.

மிதுனம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். குடும்பத்தில் மனக்குறைகள் அதிகரிக்கும்.பிள்ளைகளால் செலவுகள் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக் கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் இடமாற்றம் இருக்கும்.

விருச்சிகம்: சகோதரர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். தம்பதிக்குள் இணக்கமான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

தனுசு: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி பிறக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.

கும்பம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

மீனம்: பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்