இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கூட்டுத் தொழில் வீண் விவாதங்கள் நீங்கும். ஓரளவு லாபம் அதிகரிக்கும். அலுவலகரீதியான பயணம் திருப்தி தரும்.

ரிஷபம்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கடகம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். வழக்கில் வெற்றி உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். நல்ல வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

கன்னி: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் நீங்கள் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் வரக் கூடும்.

துலாம்: மன இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

விருச்சிகம்: திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரர் உதவிகரமாக இருப்பார். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வியாபாரம் சிறக்கும்.

தனுசு: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்புகிட்டும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

கும்பம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வியாபாரத்தில் பணியாட்களால் தொல்லை இருக்கும். உத்தியோகம் சிறக்கும்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க நினைப்பீர்கள். பழைய கடன் பிரச்சினை கவலை அளிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்ய முயல்வீர். வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்