இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மனதில் இருந்த அச்சம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள்.

ரிஷபம்: நீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பண வரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.

மிதுனம்: புதியவர்கள் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கடகம்: பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களுடன் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

சிம்மம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். வெளி உணவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.

கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பெற்றோர் உடல்நிலை சீராகும். அரசு, வங்கி காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

துலாம்: வெகு நாட்களாக மனதில் இருந்த பிரச்சினைக்கு முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: எதார்த்தமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு பெருகும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும்.

தனுசு: பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரி ஆதரவாக இருப்பார்.

மகரம்: பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.

கும்பம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். மருத்துவ செலவு, வாகன செலவுகள் குறையும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE