மேஷம்: செலவுகளை குறைத்து இனி சேமிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். வீண் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் புது நண்பர்கள் அறிமுகமாவர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பீர்.
கடகம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர். உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. வீடு, வாகனம் வாங்க முயற்சிப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் நீங்கள் தேடிய ஆவணம் கிடைக்கும்.
சிம்மம்: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். அலுவலக பணிகளை திறம்பட முடிப்பீர்கள். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
கன்னி: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மன நிம்மதி கிட்டும். மனைவிவழி உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர். பெரிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.
தனுசு: வீண் அலைச்சல் இருக்கும். எடுத்த வேலையை போராடி முடிக்க வேண்டும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகவும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
மகரம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவப் பதவி தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.
மீனம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago