மேஷம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
கடகம்: மறைமுக எதிர்ப்பு விலகும். உங்களின் செயல் அனைவரும் வியக்கும்படி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர். லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
» ஜன் தன் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
» திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். குலதெய்வ பிரார்த்தனை நிம்மதி தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டியை சமாளிப்பீர்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு. வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
தனுசு: தெளிவு பிறக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. பங்குதாரரின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago