மேஷம்: நியாயமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். பயணம் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரத்தில் பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.
ரிஷபம்: வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பெரியவர்கள், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. பேச்சில் பொறுமை தேவை.
மிதுனம்: நீண்டநாள் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் விலகும். பண வரவு உண்டு.
கடகம்: நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். எதிலும் நிதானம் தேவை.
» 30 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட மேலும் 40 கோடி இந்திய பெண்கள் பணி புரிய வேண்டும்
» எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் பெறுகிறேன்: வைரலான அமேசான் ஊழியரின் பதிவு
சிம்மம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும்.
கன்னி: ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். வியாபாரத்துக்காக புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள்.
துலாம்: திடீர் பயணம், அலைச்சல், அசதி, டென்ஷன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.
விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு நம்பிக்கை தரும். பயணம் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.
தனுசு: சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலம் உண்டு.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும்.
மீனம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago