இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியம். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்துக் கொள்வீர். தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி விலகும்.

கன்னி: எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர் களின் பேச்சுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும். அலுவலகத்தில் தேடப்பட்ட ஆவணம் கிடைக்கும்.

துலாம்: புது கருத்துகளால் சுற்றி இருப்பவர்களை வசீகரிப்பீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். முன்கோபம் குறையும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

தனுசு: புதிய பொறுப்பும், பதவியும் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரம், உத்தியோகத்திம் மேன்மை உண்டு.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: முன்கோபத்தை குறைத்து இங்கிதமாக பேச வேண்டும். அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போகவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்