இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

ரிஷபம்: நவீன மின் சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்தவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி விலகும்.

கடகம்: அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகன பழுது நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: தம்பதிக்குள் வீண் விவாதங்கள் வர வாய்ப்பு உள்ளது. அமைதி காக்கவும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம்,வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வியாபாரம் சிறக்கும்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர். செலவை குறைத்து சேமிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பர். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் குறையும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

மகரம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

கும்பம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம்: அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்தவும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE