இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கல்லூரி நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

ரிஷபம்: இங்கிதமாக பேசி எல்லோரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உண்டு.

மிதுனம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். அவசரத்துக்கு வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்கவும். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: உறவினர்கள் வகையில் விரயச் செலவுகள் வரக் கூடும். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டாதீர். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் பெரிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கன்னி: தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் தேடப்பட்ட ஆவணம் கிடைக்கும்.

துலாம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் முக்கிய முடிவு எடுப்பீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் யாரையும் குறை கூற வேண்டாம்.

விருச்சிகம்: புது புது யோசனைகளை தந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். பாதியில் நின்ற வேலை முடியும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அனைவரிடமும் இணக்கமாக பழகவும்.

தனுசு: முகத்தில் தெளிவு பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். புது ஆடை ஆபரணங்களில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

கும்பம்: திட்டமிட்ட சில வேலைகளை போராடி முடிப்பீர். குடும்பத்தில் சிறு சிறு கருத்து மோதல்கள் வரக் கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களை குறை கூட வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மீனம்: அடிமனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். வாகனச் செலவு குறையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE