மேஷம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.
மிதுனம்: எதிலும் நிதானமாக இருக்கவும். பூர்வீக இல்லத்தை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனை கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
கடகம்: மனதில் இருந்த வீண் பயம் விலகும். திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனம் சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலத்தில் பணிச்சுமை குறையும்.
சிம்மம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்குவீர். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும்.
கன்னி: எதிர்பாராத பண வரவால் மனமகிழ்ச்சி உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
விருச்சிகம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். மதிப்பு உயரும்.
தனுசு: நவீன மின்சாதன பொருட்களை வாங்குவீர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசித்து முடிவு எடுப்பீர். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மகரம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். விவாதம் தவிர்க்கவும்.
கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago