மேஷம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். வியாபார ரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டு.
ரிஷபம்: குடும்பத்தாருடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
சிம்மம்: புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.
கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்துபேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
துலாம்: சொந்த பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வர். வாகன பழுது நீங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
விருச்சிகம்: வீண் அலைச்சல் இருக்கும். மனைவிவழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகளின் உடல் நிலை லேசாக பாதிக்கும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
தனுசு: நண்பர்கள், உறவினர்களிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். மனதில் இருந்த பயம் அகலும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மதிப்பு உயரும்.
மகரம்: பழைய நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் இருந்துவந்த கருத்து மோதல் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு ஒருபடி உயரும். வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்.
மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago