இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அமைதி காப்பது நல்லது.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவார்கள். அலுவலக பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.

சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் போட்டி விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்கள் மீது இருந்த பழி அகலும்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

துலாம்: சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

விருச்சிகம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். வீட்டு பெரியோரின் சொல் கேட்டு நடக்கவும். வியாபாரத்தில் பணியாட்களால் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

தனுசு: இங்கிதமான பேச்சால் சுற்றி உள்ளவர்களை கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். வியாபாரம் லாபம் தரும். நண்பர்களின் உதவியுடன் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மீனம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE