மேஷம்: மனதுக்கு இதமான செய்தி வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் வேலைச் சுமை குறையும்.
ரிஷபம்: மன இறுக்கம் நீங்கி, முகப்பொலிவுடன் காணப்படு வீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பம் விலகும். குலதெய்வ பிரார்த்தனையை நல்லபடியாக நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும்.
மிதுனம்: தடைகள், இடையூறுகள் இருந்தாலும், திட்டமிட்டபடி வேலைகளை செய்துமுடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்த வர்கள், சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: அலுவலக வேலைச் சுமையால் உடல் அசதி, மன சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தினரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.
» ஒரே குடும்பத்தில் 16 பேரை இழந்த பெண்: உடல்களை அடையாளம் காண தவிப்பு - வயநாடு சோகம்
» நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வீடுகளில் கொள்ளை: போலீஸார் தீவிர ரோந்து
சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி, முக்கிய முடிவு எடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதர உறவுகளால் ஆதாயம், அனுகூலம் உண்டு. வியாபாரம் லாபம் தரும்.
கன்னி: மன நிறைவுடன் காணப்படுவீர்கள். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அலைச்சல், அசதி இருக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
துலாம்: சந்தர்ப்ப, சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த தொகை வந்துசேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்று நடப்பார்கள். வீடு, கடையை மாற்றி அமைப்பீர்கள். தொழிலில் லாபம் சேரும்.
தனுசு: எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். வேலைகளை உடனுக்குடன் முடிக்க நினைப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மகரம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்காது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வெளி உணவுகள் வேண்டாம். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்: தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு, முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள்.
மீனம்: எதையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரம் வளர்ச்சி அடையும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago