இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடை விலகும். வெளி வட்டார தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டு.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். வியாபாரத்தில் வேற்று மொழி பேசும் வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கடகம்: வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்களெல்லாம் இனி தேடி வந்து பேசுவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கன்னி: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

துலாம்: பண வரவால் பழைய கடனை பைசல் செய்வீர். தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறுவதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்: தக்க சமயத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்.

தனுசு: வீண் அலைச்சல், காரியத்தடைகள் வரக்கூடும். வெளி வட்டாரத்தில் நிதானம் தேவை. வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவி கிடைக்கும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கும்பம்: முகத்தில் தெரிந்த சோகம் மறையும். அதிகார பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். சுறுசுறுப்புடன் செயல்படுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மீனம்: எடுத்த வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர். வி.ஐ.பிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE