இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்ப உறுப்பினர்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்தவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புதுமுயற்சி மேற்கொள்வீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.

மிதுனம்: எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர். வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். வியாபாரம்,உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

சிம்மம்: கணவன்- மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். வியாபாரத்தில் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

கன்னி: எதற்கும் அவசரப்படாமல், நிதானமாக செயல்படுவது நல்லது.குடும்ப உறுப்பினர்களுடன் மனக் கசப்புகள் வரக் கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

துலாம்: பளிச்சென்றுபேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும் அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

தனுசு: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்: புதியமுயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். சக ஊழியருடன் இணக்கமாக செயல்படவும்.

கும்பம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். பொறுப்புகள், பதவிகள் தேடிவரும். பிரபலங்களும் அறிமுகமாவர்.உங்கள் வார்த்தைக்கு மதிப்புகூடும். வழக்குகள் சாதகமாகும்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர்கள். வீண் செலவுகளை குறையுங்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு, வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும் அலுவலகப் பிரச்சினைகள் தீரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்