மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. அண்டை வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
ரிஷபம்: தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக முடித்து காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரம் சார்ந்து கவுரவ பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். பணவரவு திருப்தி தரும்.
கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். வியாபாரரீதியாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
» பொன்முடியின் ரூ.14 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை
சிம்மம்: மன இறுக்கம் நீங்கும். நண்பர்கள், உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். சிலர் பழைய சம்பவங்களை பேசி காயப்படுத்துவர். வியாபாரத்தில் அலைந்து திரிந்து லாபமீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.
விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
தனுசு: பொது அறிவை வளர்த்து கொள்வீர். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். இழுபறியாக இருந்த வழக்குகளுக்கு தீர்வு காண்பீர். தியானத்தில் மனம் செல்லும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கும்பம்: பயணங்களின்போது எச்சரிக்கை தேவை. அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வெற்றி காண்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago