இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். முக்கிய பிரமுகர்கள் உதவுவர். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் அமையும்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் வீண் டென்ஷன் விலகும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.

கடகம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுங்கள். பெரியோ ரின் சொல்பேச்சை கேட்டு செயல்படுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக் கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டி விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரி பாராட்டுவார்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

துலாம்: சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்க ளின் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

தனுசு: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.

மகரம்: வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத் தில் உங்கள் பேச்சை யாரும் கேட்கவில்லையே என ஆதங்கப்படுவீர். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மீனம்: தள்ளிப் போன சுபகாரியங்கள் கை கூடி வரும். பண வரவால் வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பர். அலுவலகத் தில் அடுத்தவர் பிரச்சினையில் தலையிட வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE