மேஷம்: குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து, அமைதி திரும் பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது உத்திகளை கையாள்வீர்கள்.
ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும்.
மிதுனம்: பணம், நகை, முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப் பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.
» ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள் ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அருகிலேயே இருந்துகொண்டு, எதிராக செயல்பட்டவர்களை இனம்கண்டு ஒதுக்குவீர்.
கன்னி: பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு.
துலாம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பாராட்டு பெறுவீர்கள்.
விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் சோர்வு, வயிற்றுவலி குணமாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் பொறுமை தேவை.
தனுசு: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள்.
மகரம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். முன்கோபம், காரியத் தடைகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் கேட்டிருந்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலக ரீதியான பிரச்சினைகள் ஓயும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago