இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று பணமாக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை அடைப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும்.

மிதுனம்: தொட்டதுக்கு எல்லாம் கோபம் வரும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

கடகம்: தள்ளிப்போய்க் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியருடன் இணக்கமாக செயல்படவும். வியாபார ரீதியான பயணம் திருப்தி தரும்.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர். உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர் அலுவலகத்தில் பதவி உயர்வு உண்டு.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்கள் மறையும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள் கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். விவாதம் தவிர்ப்பீர்.

தனுசு: குடும்பத்தில் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரக் கூடும். கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் நீங்கள் தேடிக் கொண்டிருந்த முக்கிய ஆவணம் கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். வியாபாரரீதியாக திடீர் முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கும்பம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவார்கள். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மீனம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர் அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்