இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக்காட்டுவீர். தம்பதி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். மதிப்பு உயரும்.

ரிஷபம்: எடுத்த வேலையை போராடி முடிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் குழப்பங்கள் வந்து போகும். அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீர்.

மிதுனம்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த குழப்பம் தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

சிம்மம்: உடன்பிறந்தவர்கள் உங்கள்மீது அதிக அக்கறை காட்டுவர். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்தவர் தேடி வருவார். பணவரவு திருப்தி தரும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி நெருக்கம் அதிகமாகும். பழைய கடனை பைசல் செய்வீர். அலுவலகத்தில் நீங்கள் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

விருச்சிகம்: வெளியூர் பயணங்கள் அலைச்சல் தரும். குடும்பத்தினருடன் கருத்துமோதல்கள் இருக்கும். வியாபாரரீதியாக எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும்.

தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மகரம்: மனவலிமையுடன் எதையும் முடித்து காட்டுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர். உத்தியோகரீதியாக திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்