இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். வெளி வட்டாரத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் ஓர ளவு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரி பாராட்டுவார்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரரீதியான பயணம் ஆதாயம் தரும்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உத்தியோகத் தில் மேன்மை உண்டு. வியாபாரத்தில் வேற்றுமொழி பேசும் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டு.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி: கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். தாய்வழி உறவினர் மத்தியில் கவுரவம் கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். அலுவலகத்தில் பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

துலாம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளை களால் வீண் செலவு இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் யாரையும் குறை கூறுவதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தியானம் செய்யவும். உத்தியோகம், வியாபாரத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். உத்தியோகத்தில் இடமாற்றமுண்டு.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவ பதவி தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கும்பம்: முகத்தில் தெரிந்த சோகம் மறையும். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: எடுத்த வேலையை முடிக்க அரும்பாடு பட வேண்டியிருக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றலுண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE