இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்ப உறுப்பினர்களுடன் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மேலதிகாரி பாராட்டுவார்.

ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் வீண் குழப்பங்கள் விலகும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விருந்தினர் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: இங்கிதமாக பேசி கடினமான செயல்களையும் சாதிப்பீர். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகத்தில் வீண் டென்ஷன் நீங்கும்.

கன்னி: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு. மரியாதை உயரும்.

துலாம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். குழப்பம் நீங்கி மன நிம்மதி பிறக்கும். பங்குதாரர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

விருச்சிகம்: முக்கிய பிரமுகர் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்வீர். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும்.

தனுசு: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் இருக்கும். அலுவலகத்தில் பொறுப்பு கூடும்.

மகரம்: வீட்டில் பழுதான பொருட்களை மாற்றுவீர் குழந்தைக்கு உடல்நிலை சீராகும். யோகா, தியானம் என மனம் செல்லும் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபார ரீதியாக சில முடிவுகளை எடுப்பீர். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மதிப்பு உயரும்.

மீனம்: மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு. தன் வேலை உண்டு என்று இருக்கவும் நீங்கள் ஒன்று பேச, சக ஊழியர் வேறு விதமாக புரிந்து கொள்வார்

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்