விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 07-07-2024 அன்று சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-07-2024 அன்று செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-07-2024 அன்று சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதற்கேற்றவாறு எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது.
» மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 27 - ஜூலை 3
» கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 27 - ஜூலை 3
கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.
மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
விசாகம்: இந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும்.
அனுஷம்: இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.
கேட்டை: இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.
பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வணங்கிவர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சினைகள் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 5, 6 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago