இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: இங்கிதமாக பேசி கடினமான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்
கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

மிதுனம்: நீண்ட நாள் முயற்சிக்கு பலன் கிட்டும். செலவுகளைக் குறைத்து சேமிக்க தொடங்குவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.

கடகம்: வீண் குழப்பங்கள் நீங்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் நீங்க தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

சிம்மம்: மனக் குழப்பம் நீடிப்பதால் அவசர முடிவுகள் வேண்டாம். முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள் தேடி வந்து பேசுவது, வினையாக முடியும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கன்னி: எடுத்த வேலையை சற்று நிதானமாக செய்து முடியுங்கள். கணவன் - மனைவிக்குள் உரசல் போக்கு ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள வேண்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை நீடிக்கும்.

துலாம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

விருச்சிகம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

தனுசு: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

மகரம்: வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர். அலுவலகரீதியான வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

கும்பம்: தம்பதிக்குள் வீண் விவாதங்கள் விலகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

மீனம்: தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்