இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அடிமனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். தாயார், மனைவியின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும்.

ரிஷபம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.

மிதுனம்: பழைய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். பழைய கடனை பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.

கடகம்: தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்க முன் பணம் தருவீர்கள். நீண்ட நாளாக இருந்த சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்பு நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி: பணவரவு உண்டு. தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை தீரும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் இருக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

துலாம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

விருச்சிகம்: தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். வருமானம் பெருக வழி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். உத்தியோக த்தில் மேன்மை உண்டு.

தனுசு: எந்த காரியத்தையும் விவேகமுடன் செயல்படுத்தவும். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை கேட்டு நடப்பார்கள்.

கும்பம்: நல்லவர்களின் ஆதரவாலும், ஆலோசனை யாலும் சிக்கல்களையெல்லாம் முறியடித்து வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்