பொதுப்பலன்: மருந்து தயாரிக்க, மூலிகை சேகரிக்க, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அதிகாரிகளை சந்திக்க, வங்கிக்கடன் பெற, வழக்கு பேசித் தீர்க்க, காவல், வன தெய்வங்களை வணங்க நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.
மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உதவிகரமாக இருப்பார்.
ரிஷபம்: தடைகள் நீங்கும். சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் ஓரளவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.
மிதுனம்: கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர். திருமணம், கிரஹப்பிரவேசம். சீமந்தம் என்று குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.
» மேற்கு வங்க மாநில ஆளுநர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்
» கடந்த அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி நியமனங்கள் ரத்து
கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். ஓரளவு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
சிம்மம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தாயார், மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகவும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.
கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். மனைவி, பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.
துலாம்: நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்துப் பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். பொறுப்புகள் கூடும்.
விருச்சிகம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். தாயார், பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வெளியூர் பயணம் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உருவாகும். சக ஊழியருடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.
தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்கள் அனைத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி நீங்கி, மதிப்பு, மரியாதை உயரும்.
மகரம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. நீண்ட நாளாக தொல்லை தந்த வாகனத்தை சரி செய்வீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் தலைமை அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்.
கும்பம்: தவிர்க்க முடியாத செலவுகள், பயணங்கள் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். குழப்பமான மனநிலை மாறி இயல்பு நிலை திரும்பும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். பொறுப்புகள் கூடும்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பழைய நண்பர்கள் உதவுவார்கள். நீங்கள் பேசுவதை, மற்றொருவர் வேறுவிதமாக புரிந்து கொள்வார். பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போராட்டம் இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago