இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: மருந்து தயாரிக்க, மூலிகை சேகரிக்க, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அதிகாரிகளை சந்திக்க, வங்கி கடனுதவி பெற, வழக்கு பேசித் தீர்க்க நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மேஷம்: உங்களது உற்சாகமான, ஊக்கம் தரும் பேச்சை சுற்றியிருப்பவர்கள் ரசிப்பர். பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீடு, வாகனத்தை மாற்ற திட்டமிடுவீர். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டு. அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: வியாபாரத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதால் மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணவரவு திருப்தி தரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி, சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: புதிய முயற்சிகள் தடைபடும். குடும்பத்தில் நிதானமாக பேசுங்கள். சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். பணப் பற்றாக்குறை உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும். உத்தியோகத்தில் குழப்பங்கள் வரும்.

கடகம்: எதிர்பார்த்தபடி வேலையை முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டறிவீர். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரரீதியாக சிலரின் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவதற்கு முன் பணம் தருவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சினை, வழக்குகள் இப்போது முடிவுக்கு வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய பதவி கிடைக்கும்.

கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அதற்கு தகுந்தாற்போல் சில முக்கிய பிரமுகர்களும் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புதிய பங்குதாரர்களின் ஆதரவுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது.

துலாம்: அடிமனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவர். தாயார், மனைவியின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடும்.

விருச்சிகம்: அதிரடியான முடிவுகளை எடுத்து சுற்றி இருப்பவர்களை வியக்க வைப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நிம்மதியுண்டு. பணவரவு திருப்தி தரும். விருந்தினர்களின் வருகையால் சந்தோஷம் கிட்டும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஊழியர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம்.

தனுசு: எரிச்சல், முன்கோபம் இருக்கும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அலைச்சல் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மகரம்: சுற்றியிருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது. குடும்பத்தில் நிம்மதி கிட்டும். வீண் விவாதங்கள் வேண்டாம். வேலைச் சுமை அதிகரிக்கும். மகன், மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதமாக முடியும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.

கும்பம்: பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகம் பெருகும். வெளியூர் பயணங்களால் வெற்றி உண்டு. தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்று தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். மேலதிகாரி உங்களை பெருமையாகப் பேசுவார். பணவரவு உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி அடைவீர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். யாரையும் பகைத்து கொள்ளாதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்