விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்: 01-05-2024 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 07-05-2024 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-05-2024 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20-05-2024 அன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 24-05-2024 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 31-05-2024 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றி பெறும் விருச்சிக ராசியினரே! உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். இந்த மாதம் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மன மகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.
» குருப் பெயர்ச்சி: விருச்சிகம் ராசியினருக்கு எப்படி? - 01.05.2024 முதல் 13.04.2025 வரை
» துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஏப்.25 - மே 1
குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள்மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு உங்கள் கவுரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
அனுஷம்: இந்த மாதம் தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.
கேட்டை: இந்த மாதம் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சினைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.
பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும் | சந்திராஷ்டம தினங்கள்: 11, 12 | அதிர்ஷ்ட தினங்கள்: 05, 06
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago