இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: கடன் தீர்க்க, வங்கிக் கடன் பெற, விவாதங்கள் நடத்த, தற்காப்புக் கலைகள் பயில, சொத்துப் பிரச்சினை பேசி தீர்க்க, கண் திருஷ்டி கழிக்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வகையில் மகிழ்ச்சி தங்கும். புதிய பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: நட்பு வட்டம் விரியும். பழைய சொத்து பிரச்சினைகளை தீர்ப்பீர். தாயாருடன் விவாதம் தவிர்க்கவும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செல்லவும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.

மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர்கள். புதிய பதவி கிடைக்கும். வாகனப் பழுதை சீர் செய்வீர்.

கடகம்: எதிரிகளின் கொட்டம் அடங்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம் தொடர்பாக புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உத்தியோகத்தில் குழப்பம் தீர்ந்து நிம்மதி உண்டு. வெளியூர் பயணம் திருப்தி தரும்.

சிம்மம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர்கள். சொந்த -பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக நிறைவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். குழப்பங்கள் தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனச் செலவுகள் நீங்கும். வீண் அலைச்சல்களிலிருந்து விடுபடுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கூடும்.

துலாம்: ஒருவித படபடப்பு, டென்ஷன் வந்து செல்லும். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். இரண்டு மூன்று முறை அலைந்த பிறகே காரியங்களை சாதிப்பீர். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு, மரியாதை கூடும். புதிய தொழில் தொடங்குவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செல்லவும்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகம் சார்பாக வெளியூர் பயணம் அமையும்.

மகரம்: புதிய நட்பால் உற்சாகமடைவீர். குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வீண் அலைச்சல் குறையும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். வாகனச் செலவு நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

மீனம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வர். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்