இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: பூமி பூஜை செய்ய, நிலம் வாங்க முன்பணம் தர, சித்தர்கள், குலதெய்வத்தை வழிபட, கிரிவலம் வர, அன்னதானம் செய்ய, சொத்து விவகாரம் பேசி தீர்க்க நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மேஷம்: நினைத்தது அனைத்தும் நிறைவேறும். மனக்குழப்பங்கள் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால்தெளி வடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பூர்வீக சொத்து பிரச்சினையில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். மனைவியுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் -மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. பங்குதாரர்களின் ஆதரவுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்பு சேரும்.

சிம்மம்: உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தில் பழுதை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: தொட்டது துலங்கும். தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாகப் பேசுவீர்கள். பழைய கடனைப் பைசல் செய்ய புது வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அளிப்பார்கள். புதிய தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அலுவலகத்தில் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

துலாம்: மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தை மாற்றுவீர்கள். இழுபறியாக இருந்த பழைய வழக்குகள் சாதகமாகும். புதிய பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

விருச்சிகம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் வீடு தேடி வந்துப் பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பிரச்சினைகள் தீர வழி கிடைக்கும்.

தனுசு: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் வேலை பளு குறையும். மேலதிகாரியின் ஆதரவுடன் பெரிய பிரச்சினையை தீர்த்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.

மகரம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்த கால சாதனைகளை நினைத்து மகிழ்வீர்கள். அக்கம் - பக்கத்தினருடன் வீண் விவாதம் தவிர்க்கவும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். புதிய பதவி கிடைத்து பொறுப்புகள் கூடும்.

மீனம்: சேமிப்புகள் கரையும். கணவன் - மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். யோகா, ஆன்மிகத்தில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளவும் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய பங்குதாரருடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்