12 ராசிகளுக்கு குரோதி வருட ‘ஒரு வரி’ பலன்களும் பரிகாரமும்

By செய்திப்பிரிவு

மேஷம்: இந்த குரோதி வருடம் நீங்கள் கையில் எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களை வெற்றி பெற வைக்கும். | பரிகாரம்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமான் கோயில் சென்று தரிசியுங்கள். சகல பாக்கியமும் உண்டாகும். கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள்.

ரிஷபம்: இந்த தமிழ் புத்தாண்டு இடமாற்றத்தையும், வேலைச் சுமையையும் தந்து உங்களை அலைக் கழித்தாலும் உங்களுடன் பழகுபவர்களின் உண்மை சுயரூபத்தை உணர்த்துவதாக அமையும். | பரிகாரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானை திருவாதிரை நட்சத்திர நாளில் தும்பை பூ மாலை அணிவித்து வணங்குங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

மிதுனம்: இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்களை கடினமாக உழைக்க வைத்து, தன்னம்பிக்கையால் தலை நிமிரச் செய்யும். | பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ,ஸ்ரீரங்கநாதப் பெருமாளை ரேவதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.

கடகம்: இந்தப் புத்தாண்டு சின்ன சின்ன கசப்பான அனுபவங்களைத் தந்தாலும் அனுபவ அறிவால் முன்னேறுவதாக அமையும். | பரிகாரம்: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்  சிம்ம தட்சிணாமூர்த்தியை ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். முடிந்தால் ஏழை நோயாளிக்கு மருந்து வாங்கிக் கொடுங்கள்.

சிம்மம்: இந்த தமிழ் புத்தாண்டு முற்பகுதியில் சின்ன சின்ன முடக்கங்களையும், சங்கடங்களையும் தந்தாலும், மையப்பகுதியில் வருங்காலத் திட்டங்களை ஓரளவு நிறைவேற்றித் தருவதாக அமையும். | பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 7 கி.மி தொலைவில் உள்ள அழிசூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருளாலீசுவரரை சென்று வணங்குங்கள். ஏழைக் கன்னிப்பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள். வசதி, வாய்ப்பு பெருகும்.

கன்னி: இந்த குரோதி ஆண்டு ஒருபக்கம் வசதி, வாய்ப்புகளைத் தருவதுடன், சற்றே சுகவீனங்களையும் தருவாக அமையும். | பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்புவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகம்பகரேஸ்வரர் கோயிலில் இருக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள். ஏழை மாணவனுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுங்கள். நிம்மதி கிட்டும்.

துலாம்: இந்தப் புத்தாண்டு சின்ன சின்ன ஏமாற்றங்களை தந்தாலும் வெளிச்சத்தை நோக்கி பயணிக்க வைத்து சாதனைகள் படைக்கத் தூண்டும். | பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள். வெற்றி நிச்சயம்.

விருச்சிகம்: இந்தப் புத்தாண்டு ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு பரபரப்பாகவும், அதிக நேரம் உழைக்க வைப்பதாகவும் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை தருவதாக அமையும். | பரிகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கையில் வீற்றிருக்கும் ஸ்ரீகால பைரவரை சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். ஆரோக்கியம் சீராகும்.

தனுசு: இந்த புத்தாண்டு உங்களைக் கொஞ்சம் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் வளைந்துக் கொடுத்துப் போகும் கலையை கற்றுத் தருவதாக அமையும். | பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை சென்று வணங்குங்கள். செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மகரம்: இந்த குரோதி வருடம் அவ்வப்போது உங்களை கோபப்படுத்தி முணுமுணுக்க வைத்தாலும் அனுபவ அறிவால் முன்னேற வைக்கும். | பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், கொழுமம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீகல்யாண வரதராஜரை சென்று வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கும்பம்: இந்தப் புத்தாண்டு ஆரோக்கிய குறைவையும், காரியத் தடங்கல்களையும் தந்தாலும் தொடர் முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும். | பரிகாரம்: அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை சென்று வணங்குங்கள். தந்தையில்லா பிள்ளைக்கு உதவுங்கள். மன நிம்மதி உண்டாகும்.

மீனம்: இந்த குரோதி ஆண்டு அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம், பதவியையும் அள்ளித் தருவதாகவும் வாழ்வில் புதிய சகாப்தத்தையும் படைக்கும் வல்லமையையும் தரும். | பரிகாரம்: மதுரை மாவட்டத்தில் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மனை சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள். கடன் பிரச்சினை தீரும்.

- வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்