பொதுப்பலன்: வாகனம் விற்க, கடன் பைசல் செய்ய, வீட்டை புதுப்பிக்க, சொத்து விவகாரங்கள் பேச, முத்து, சங்கு
சேகரிக்க, வங்கிக் கடன் பெற, செங்கல் சூளை பிரிக்க, நவக்கிரக சாந்தி செய்ய, பயணம் தொடங்க நல்ல நாள். யோக ஹயக்ரீவரை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேகம், பாசிப் பருப்பு
பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப் பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். பணவரவு உண்டு.
ரிஷபம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். வேற்றுமதத்தினர், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.
மிதுனம்: கடந்த காலத்தில் நன்றி மறந்தவர்களை நினைத்து வருத்தமடைவீர். குடும்பத்தினரை அனுசரித்து போகவும். அலுவலகத்தில் உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவர். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
கடகம்: பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழியை கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முகப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.
கன்னி: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: வீட்டில் மகள், மகனின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும்.
தனுசு: கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.
மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். புதிய வீடு வாங்க திட்டமிடுவீர். பழைய வழக்குகள் இழுபறியாகும். வியாபாரத்தில் குழப்பம் நிகழும்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தாயாருக்கு உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார் கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையுண்டு.
மீனம்: குழப்பம் நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும். முக்கிய பிரமுகர்களுக்கு நண்பராவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் வேலையாட்களை மாற்றுவீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago