மேஷம்: கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மகனின் படிப்பு தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும்.
ரிஷபம்: பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்குகளில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். பணவரவு ஓரளவு திருப்தி தரும். வியாபாரத்தில் நிதானம் தேவை. புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது நண்பர்கள் அறிமுகமாவர். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். வாகனப் பழுது நீங்கும்.
கடகம்: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் மகிழ்ச்சி பொங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். பிள்ளைகள் விருப்பத்தைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர். அலுவலக பணிகளை திறம்பட முடிப்பீர்.
சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்பட்ட நீங்கள் இனி சேமிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள்.
கன்னி: குடும்பத்தில் நிலவி வந்த காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
துலாம்: மூத்த சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து வழக்கில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அலுவலக மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.
விருச்சிகம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழிலில் போட்டி குறைந்து லாபமுண்டு.
தனுசு: புதிய வீடு, வாகனம் வாங்குவது தொடர்பாக திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். முன்கோபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.
மகரம்:மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் உபாதைகள் சீராகும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். முக்கிய நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். ஆடை, ஆபரணம் சேரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பர். வியாபாரம் சூடு பிடிக்கும்.
மீனம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனிகை கூடி வரும். குழப்பம் நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. மனைவி, பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். பழைய வழக்குகள் சாதகமாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago