பொதுப்பலன்: விவசாய வேலைகள் தொடங்க, அழகு, உடற்பயிற்சி சாதனங்கள், செல்லப் பிராணிகள் வாங்க, மருந்துண்ண, கடன் தீர்க்க, வாகனம் விற்க, வழக்குகள் பேசி தீர்க்க, பழைய நண்பர்களை சந்திக்க, சாதுக்களின் ஆசிர்வாதம் பெற நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவகிரக குரு பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.
மேஷம்: முகத்தில் தெளிவு பிறக்கும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி நண்பராவார். வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். பழைய வழக்கு உங்களுக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள்.
கடகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்க பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
சிம்மம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்.
கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.
துலாம்: அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள். தவிர்க்க முடியாத பயணங்கள் இருக்கும். தூக்கமும் கொஞ்சம் குறையும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புது ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
தனுசு: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பணவரவு உண்டு.
மகரம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள் . நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
கும்பம்: புதுப் புது யோசனைகளை தந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். அழகுப் பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
மீனம்: முன்கோபத்தால் வீண் செலவுகள் வரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துப் போகவும். அடுத்தவர்களை குறைகூற வேண்டாம். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. வழக்கு இழுபறி நிலையில் இருக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago