துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: மற்றவர்கள் குறைகள் கூறாமல் நடந்து கொள்ளும் துலா ராசி அன்பர்களே... இந்த காலகட்டத்தில் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நலபாதிப்பு உண்டாகலாம். மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். தாமதமான போக்கு காணப்பட்டாலும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். மாணவர்களுக்கு கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. உயர் கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.
» துலாம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024
» விருச்சிகம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024
சித்திரை: இந்த வாரம் அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.
சுவாதி: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும்.
விசாகம்: இந்த வாரம் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். பணவரத்து அதிகரிக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: வார்த்தைகளை அளந்து பேசுவது போல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே... இந்த காலகட்டத்தில் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலைநிமிர்ந்து நடப்பீர்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.
கலைத்துறையினர் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
விசாகம்: இந்த வாரம் தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். பிரச்சினைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். வாக்குவன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்ட மிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
அனுஷம்: இந்த வாரம் பலவித நற்பலன்களை உண்டாகும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் துணிச்சலாக எதிலும் ஈடுபடச் செய்யும். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை.
கேட்டை: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்கள்: தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே... இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்ம சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள்.
நீங்கள் நன்மைக்காக போராட தயங்காதவர். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். தொழில் வியாபாரம் சிறப்படையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும்.
மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினர் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும்.
மூலம்: இந்த வாரம் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சினைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.
பூராடம்: இந்த வாரம் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான வேலைகளையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.
உத்திராடம்: இந்த வாரம் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பணகஷ்டம் குறையும். பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட் டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago