பொதுப்பலன்: விவகாரங்கள் பேசி முடிக்க, கணிதப் பாடம் பயில, பழைய நண்பர்களை சந்திக்க, தற்காப்புக் கலைகள், மல்யுத்தப் பயிற்சி தொடங்க, சபை கூட்டி ஆலோசனை நடத்த, காவல், வனதெய்வங்கள், சித்தர் பீடத்தை வழிபட நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.
மேஷம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய வழக்குகள் சாதகமாகும்.
ரிஷபம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
மிதுனம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய பள்ளி நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். வாகனத்தை மாற்ற வழி பிறக்கும்.
» பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மீண்டும் அமைச்சர் ஆனார்
» மாஸ்கோவில் அரங்கிற்குள் துப்பாக்கி சூடு: 18 பேர் பலி, 100+ காயம்
கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த சிலரின் உதவியை நாடுவீர்கள்.
சிம்மம்: வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்திலும், குடும்ப விஷயத்திலும் நிதானத்தை கடைபிடியுங்கள். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவுகள் இருக்கும்.
கன்னி: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவியுடன் தடைபட்ட வேலை முடியும்.
துலாம்: உத்தியோகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். வீட்டில் விருந்தினர்களின் வருகையுண்டு. மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வாகனப் பழுது நீங்கும்.
விருச்சிகம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.
தனுசு: பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவு படுத்த புது யுக்திகளை கையாளுவீர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவர். வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் விலகும்.
மகரம்: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.
கும்பம்: குழப்பம் நீங்கி மன நிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். மாணவர்கள் கனவுகள் நினைவாக முயற்சிப்பார்கள்.
மீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். தடை, எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் சொத்து பிரச்சினை தீரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago