பொதுப்பலன்: கடன் தீர்க்க, கம்ப்யூட்டர் பயில, வாகனம் விற்க, சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க, உறவினர்களை சந்திக்க, மூலிகை மருந்துண்ண, வீடு வாங்குவதற்கு முன்பணம் தர நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மேஷம்: கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளை கள் பொறுப்பாக நடந்து கொள்வர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர். உத்தியோகத்தில் வீண் டென்ஷன் நீங்கும். பழைய வழக்கு சாதகமாகும்.
ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவர். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
மிதுனம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குழப்பங் கள் நீங்கி குடும்பத்தில் ஓரளவு நிம்மதியுண்டு. உறவினர்களுடன் இணக்கமான போக்கை கடை பிடிக்கவும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
» திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு: மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி
» தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ராஜினாமா: தேர்தலில் போட்டியிடுகிறார்
கடகம்: மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு உண்டு. சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறுவீர்கள். வாயுக் கோளாறு வரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
சிம்மம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர். மனநிம்மதி பிறக்கும். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பர். வழக்கு சாதகமாகும்.
கன்னி: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும்.
துலாம்: சோர்வு நீங்கி துடிப்புடன் காணப்படுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். சக ஊழியர் மத்தியில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை வழக்கம்போல் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
தனுசு: பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளவும். புதிய வாகனம் வாங்கத் திட்டமிடுவீர். பழைய வழக்கில் நல்ல தீர்ப்பால் மனநிம்மதி பிறக்கும். வீண் செலவு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
மகரம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவர். பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர். மாணவ - மாணவிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
கும்பம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.
மீனம்: குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் வெளியில் சென்று வருவீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். வேலைச் சுமை குறையும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago