பொதுப்பலன்: சொத்து விவகாரங்கள் பேச, மூலிகை மருந்துண்ண, பரத நாட்டியம் பயில, செல்ல பிராணிகள் வாங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மேஷம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக் கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உங்களுக்கு திருமணம், சீமந்தம், போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
மிதுனம்: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டி கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பயனடைவீர்கள்.
கடகம்: எதிரிகளின் கொட்டம் அடங்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்.
சிம்மம்: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்க வேண்டாம். குடும்பத்தில் கூச்சல் குழப்பங்கள் நிகழும். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வாகனத்தை சீர் செய்வீர். பணவரவு திருப்தி தரும்.
துலாம்: பள்ளி, கல்லூரி நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபாரரீதியாக சிலரின் அறிமுகம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வழக்குகள் சாதகமாகும்.
விருச்சிகம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. கலை பொருட்கள் சேரும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டு நிறைவேற்றுவீர். தாய்வழி உறவுகளால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள் விலகும்.
மகரம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர்.
கும்பம்: வருங்காலத்துக்கான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிட்டும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
மீனம்: பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடு கோபம் தருவதாக அமையும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago