இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

பொதுப்பலன்: வங்கிக் கடன் பெற, சொத்து விவகாரங்கள் பேச, தற்காப்புக் கலைகள் பயில, உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள் வாங்க, புது பதவி ஏற்க, ரத்தினங்கள் அணிய, பயணம் தொடங்க, பழைய நண்பர்களை சந்திக்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும்.

மேஷம்: எதிர்பார்த்தபடி வேலையை முடிப்பீர். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டறிவீர். வியாபாரரீதியாக சிலரது உதவி நிச்சயம் கிடைக்கும்.

ரிஷபம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர். உடல்நலம் சீராகும். சேமிப்பை அதிகரிப்பீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

மிதுனம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் வரும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கடகம்: வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். வருங்காலத்துக்காக சேமிப்பீர். வாகனப் பழுது நீங்கும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்.

சிம்மம்: பணவரவு ஓரளவு திருப்தி தரும். உங்களது உற்சாகமான பேச்சை சுற்றி இருப்பவர்கள் ரசிப்பர். வீடு, வாகனத்தை மாற்ற முயற்சிப்பீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்.

கன்னி: வியாபாரத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

துலாம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். நெருங்கியவர்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்ளாதீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

விருச்சிகம்: பழைய உறவினர், நண்பர்கள் உதவுவர். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

தனுசு: புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். குழப்பங்கள் நீங்கி வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். முன்கோபம் குறையும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர்.

மகரம்: வீட்டுக்கு உறவினர்கள், நண்பர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் நீண்டநாள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். குடும்பத்தினர் உதவிகரமாக இருப்பர்.

கும்பம்: வீண் அலைச்சல்,டென்ஷனிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டில் புது ஆடை, ஆபரணங்கள் சேரும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள்.

மீனம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லேசாகதலை வலிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்