பொதுப்பலன்: அழகு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, தற்காப்பு கலைகள் பயில, சமையலறையை புதுப்பிக்க, எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்க, பழைய கடன்கள் பைசல் செய்ய நல்ல நாள். சனிபகவானுக்கு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைகள் விலகி காரியங்கள் நிறைவேறும். வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம், சனி காயத்ரி, விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதால் வெற்றி உண்டாகும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பதால் மன அமைதி கிடைக்கும்.
மேஷம்: மனக் குழப்பங்கள் விலகும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் நிம்மதி பிறக்கும்.
ரிஷபம்: நண்பர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தவர்களால் ஆதாய மடைவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைககு வரும். உறவினர்களும் உதவிகரமாக இருப்பர்.
மிதுனம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து, நீண்ட நாளாக காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.
கடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். ஈகோ பிரச்சினை நீங்கி, தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்க திட்டமிடுவீர். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
கன்னி: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
துலாம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகவும்.
விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். சகோதரர்களும் பக்க பலமாக இருப்பர். சக ஊழியர்களிடம் நட்புடன் இருக்கவும்.
தனுசு: பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குழப்பம் நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்.
மகரம்: குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப்பேசி கருத்து வேறுபாடுகளை களைவீர். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக சிலரை சந்திப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்.
கும்பம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு.
மீனம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். புதிய வாகனம் வாங்குவீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago