மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.22 - 28

By Guest Author

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் முடிவில் நன்மை நடக்கும். மனசஞ்சலம் நீங்கும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். அரசாங்க ரீதியிலான அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள்.

குழந்தைகளால் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். வீண் கவலை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - லாப ஸ்தானத்தில் ராகு- அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். கடன் தொல்லை குறையும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் இருந்து வந்த தடைகள் அகலும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி நல்லபடியாக நடைபெறும்.

கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன்நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும்.

கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். தடைநீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும். கடன் பிரச்சினை தீரும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் பணவரத்து நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்திற்காக கடன் எதிர்பார்த்தவர்களுக்கு நினைத்த இடத்தில் கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்திடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள்.

குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இளைய சகோதர சகோதரிகளிடம் நிலவி வந்த வருத்தங்கள் நீங்கும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.

சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். மேலிடத்தில் இருந்து வரும் தகவல்கள் உங்களுக்கு நல்லதாகவே அமையும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரிய தாமதமும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை. மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: மதுரை மீனாட்சியை வணங்க வாழ்க்கை வளம் பெறும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்