பொதுப்பலன்: கதிரறுக்க, வாகனம் விற்க, அணை கட்ட, வியாபாரக் கணக்கை முடிக்க, பணியாட்களை விடுவிக்க, இசை வகுப்புகளில் சேர, புதிய தொழில் தொடங்க, வழக்கு தொடர நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் தடைகள் விலகி, எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும்.
மேஷம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நல்ல முடிவு எடுப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகள் குறையும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்: முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். உடல்சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்து போகும். குடும்பத்தினரை அனுசரித்து போவதால் நன்மை உண்டு. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
கடகம்: நேர்மறையான எண்ணங்கள் மறையும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தலைவலி, காய்ச்சல் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவர்.
சிம்மம்: எதிர்பார்த்தபடி பணம் வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வியாபார ரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவீர். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
கன்னி: வெளியூர் பயணங்களால் நன்மை உண்டு. பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். குழப்பம் தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுபேசுவீர். நீண்ட நாள் தொழில் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்: அதிரடியான முடிவுகளை எடுப்பதாக நினைத்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அன்பு காட்டவும். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்க்கவும்.
தனுசு: சகோதரர்களின் ஆதரவு உண்டு. பேச்சில் முதிர்ச்சி தெரியும்.வாகனம் செலவு வைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
மகரம்: பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர். வேற்றுமதத்தினர், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. குழப்பங்கள் விலகும். உடல் நலத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கும்பம்: குழப்பம் நீங்கி வீட்டில் சந்தோஷம் தங்கும். காணாமல்போன முக்கிய ஆவணம் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். வாயுக் கோளாறு, சளித் தொந்தரவு நீங்கும்
மீனம்: குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவீர். செலவுகளை கட்டுப்படுத்துவீர். புதிய வாகனம் வாங்குவீர். தாயின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago