இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதார்த்தமாகவும், தத்துவமாகவும் பேசி எல்லோருடைய இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள்.

ரிஷபம்: இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

மிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி ஏற்படும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு.

கடகம்: முன்கோபம் நீங்கும். நெருங்கிய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனின் அதிகம் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

சிம்மம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.

கன்னி: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய விஷயத்தில் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உடல்சோர்வு நீங்கும். எதிர்பாராத பயணம் ஏற்படும்.

துலாம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகளால் டென்ஷன் ஏற்படும். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

தனுசு: கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்கள் விலகும்.

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

மீனம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கடன் வாங்க வேண்டி வரும். வேலைப்பளு அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்