மேஷம்: தோல்வி பயம் நீங்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். சகோதரர்கள் உதவுவர். வரவேண்டிய பாக்கியை வசூல் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டு.
ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். குழப்பங்கள் நீங்கி கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.
மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலைச்சல் குறையும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.
கடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
» சிமி அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிப்பு
» சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரான் மீன்பிடி படகை மீட்ட இந்திய போர்க்கப்பல்
சிம்மம்: வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர். மகன், மகளின் திருமணம் சிறப்பாக நடத்துவீர்.
கன்னி: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மனஇறுக்கம் நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. வழக்கு சாதகமாகும். புதிய வீடு வாங்க கடனுதவி கிடைக்கும்.
துலாம்: சில காரியங்களை போராடி முடிக்க வேண்டும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தரவேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்களுடைய பலம், பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள்.
தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மகரம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு உண்டு. பயணங்கள் திருப்தி தரும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள்.
கும்பம்: தடுமாற்றங்கள் நீங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர். எடுத்த காரியங்களை முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். சக ஊழியர் தொல்லை நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
மீனம்: சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருக்காதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago