இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: பணவரவு திருப்தி தரும். நண்பர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும். உறவினர்களும் உதவிகரமாக இருப்பர். வேற்று மதத்தவர், வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

கடகம்: நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு காரியங்களில் தடைகள் வரக் கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு கிட்டும். பழைய நல்ல நினைவுகள் மனதை தாலாட்டும். கையில் பணம்புரளும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

கன்னி: உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு உண்டு. புதிய வாகனம் வாங்குவீர். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

துலாம்: நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொல்லை தந்த வாகனத்தை சரி செய்வீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

விருச்சிகம்: அண்டை அயலாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். கடன் பிரச்சினை தீரும்.

தனுசு: அண்டை அயலாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். கடன் பிரச்சினை தீரும்.

மகரம்: பிள்ளைகள் பொறுப்பாக இருப்பர். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபத்தை இரட்டிப்பாக்குவீர். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

மீனம்: தெளிவான முடிவுகளை எடுத்து ஆச்சர்யப்படுத்துவீர். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE