இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிள்ளைகள் தங்கள் கொள்கையில் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அயலார் சிலரின் செயல்பாடுகள் கோபம் அடைய வைக்கும். வியாபாரத்தில் நிதானம் தேவை.

ரிஷபம்: உங்கள் கை ஓங்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக் களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். பணவரவால் பழைய கடன் தீரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கடகம்: தடைபட்ட வேலைகள் முடிவுக்கு வரும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: எதிர்ப்புகளை தகர்த்தெறிவீர்கள். பணவரவு திருப்தி தரும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். நிலுவைத் தொகை வசூலாகும்.

கன்னி: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. உறவினர், நண்பர்களால் மனக்கசப்பு ஏற்படும்.

துலாம்: சகோதர - சகோதரிகளால் உதவிகள் உண்டு. தள்ளிப் போன திருமணம் கூடிவரும். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். பணவரவு திருப்தி தரும்.

விருச்சிகம்: பால்ய நண்பர் ஆதரவாக இருப்பார். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

தனுசு: பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அலு வலகம் சார்பாக வெளியூர் பயணம் உண்டு.

மகரம்: குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தொல்லை தந்த வாகனம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

கும்பம்: புது முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். பணவரவு உண்டு. கடன் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: மன உளைச்சல் நீங்கும். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். முக்கிய பிரமுகர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற் பீர்கள். ஆன்மிகத்தி்ல ஈடுபாடு அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்