மேஷம்: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்து விடவேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
ரிஷபம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலைச் சுமை குறையும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
மிதுனம்: அலைச்சலும், செலவுகளும் இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப்போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் நிதானம் தேவை.
கடகம்: மனநிறைவுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
சிம்மம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். வெளியூர் பயணம் திருப்திகரமாக அமையும்.
கன்னி: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். மனதில் நிம்மதி ஏற்படும். வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவீர். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.
துலாம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். பணப் பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள்.
விருச்சிகம்: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபார ரீதியாக துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்.
தனுசு: குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனதில் புத்துணர்ச்சி காணப்படும்.
மகரம்: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
கும்பம்: திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார். வியாபாரம் சூடுபிடிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago